திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு ஜீரோ என்ற படம் வெளியானது. ஆனால் அந்த படம் தோல்வி அடைந்து விட்டது. அதையடுத்து நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது அவர் நடித்துள்ள பதான் என்ற படம் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நாயகியாகவும், ஜான் ஆபிரகாம் வில்லனாகவும் நடிக்க, சல்மான்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து தீபிகா படுகோனே கவர்ச்சி நடனமாடிய பாடலுக்கு இந்து அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது அந்த பாடலுடன் இப்படம் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் ஆங்காங்கே திரையரங்குகளின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். சில இடங்களில் இப்படத்தின் பேனர்கள் எரிக்கப்பட்டது. ஆனால் எல்லாவற்றையும் மீறி படத்திற்கான வசூல் சிறப்பாக உள்ளது.
இந்த நிலையில் ஷாருக்கானின் பதான் படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், ‛‛பதான் படம் குறித்து நல்ல தகவல்களை கேட்டு வருவதாகவும், இப்படத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்கள்'' என்று கூறியுள்ள கமல்ஹாசன், உங்கள் வழியில் செல்லுங்கள் சகோதரரே என்று தெரிவித்துள்ளார்.