ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகை நித்யா மேனன் கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் நமக்கும் இப்படி ஒரு தோழி கிடைக்க மாட்டாளா என படம் பார்த்த ரசிகர்களை ஏங்க வைத்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாபுரம் என்கிற கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடம் ஒன்றுக்கு விசிட் அடித்த நித்யா மேனன் அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் குழந்தைகளுக்கு கதை சொல்கிறார் நித்யா மேனன். அவர்களும் அதை ரொம்பவே ஆர்வமுடன் கேட்கிறார்கள். இந்த அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ள நித்யா மேனன் இந்த புது ஆண்டில் எனக்கு கிடைத்த அன்பு இது. இங்கிருந்து நான் எடுத்து செல்வதற்கு எனக்கு நிறையவே கிடைத்தது. கிராமத்தில் உள்ள குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் தங்களை சுற்றி உள்ளவற்றை புரிந்து கொள்ளும் அதிகப்படியான தன்மையுடனும் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.