நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அஜித்துடன் சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் நடித்தார். இந்த படப்பிடிப்பின் இடைவேளையில் அஜித்துடன் இமாலாயவில் பைக் பயணமும் மேற்கொண்டார். இந்த நிலையில் தற்போதுதான் அவர் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.
பைக் ரைடிங்கில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், அஜித் போன்று நீண்ட தூரம் பைக் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்காக தற்போது லைசன்ஸ் பெற்றுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் காக்கநாடு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் முறையாக வாகனம் ஓட்டி, உரிமம் பெற்றுள்ளார்.
இப்போதுதான் உரிமம் பெற்றிருந்தால், இதற்கு முன்பு துணிவு படத்திற்காக பைக் ஓட்டியது, அஜித்துடன் பைக் பயணம் மேற்கொண்டது எல்லாமே லைசன்ஸ் இல்லாமல்தானா. இது சட்டப்படி குற்றமில்லையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.