ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் தண்டுபால்யா என்ற படம் வெளிவந்தது. கொடூர கொலைகளை செய்யும் ஒரு கும்பலை பற்றிய படம். அதே போன்று இப்போது உருவாகி உள்ள படம் கொட்டேஷன் கேங். இந்த படத்தில் பிரியாமணி, சன்னி லியோன், ஜாக்கி ஷெராப், சாரா அர்ஜூன், அஷ்ரப் மல்லிசேரி, ஜெய பிரகாஷ், அக்ஷயா, பிரதீப் குமார், விஷ்ணோ வாரியர், சோனல் கில்வானி, கியாரா, சட்டிண்டர், ஷெரின் நடித்துள்ளனர். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ் சிவமணி இசை அமைத்துள்ளார்.
இதில் பிரியாமணி கூலிக்காக கொலை செய்யும் படையின் தலைவியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படம் பற்றி இயக்குனர் விவேக் கண்ணன் கூறியதாவது: இந்தக் கதையை நாங்கள் ஓடிடிக்கான படமாகதான் ஆரம்பித்தோம். ஆனால், இது தியேட்டருக்கான படம் என்பதை பின்பு உணர்ந்தோம். இந்தப் படம் கேங் வார் குறித்தானது கிடையாது. ஆனால் உணர்ச்சி மிகுந்த பணத்துக்காக கொலை செய்யக்கூடிய கொலைகாரர்கள் பற்றிய கதையாக இது இருக்கும்.
சென்னை, மும்பை மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் படமாக்கி உள்ளோம். பிரியாமணியிடம் இந்த கதையை சொன்னதும் கதை பிடித்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டார்.அதேபோல, ஜாக்கி ஷெராப் கதைக்கு உள்ளே வந்ததும் இது பான் இந்தியா படமாக மாறியது. படத்தில் சன்னி லியோன் தீவிரமான நடிப்பைக் கொடுத்துள்ளார். சாரா அர்ஜூன் இதுவரை கண்டிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். என்றார்.




