300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அஜித்குமார், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'துணிவு'. இப்படம் தெலுங்கில் 'தெகிம்பு' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் வெளியான அன்றே தெலுங்கிலும் வெளியானது. ஆனால், தெலுங்கில் எதிர்பார்த்தபடி வரவேற்பையும் பெறவில்லை, வசூலையும் பெறவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் 3 கோடிக்கும் கொஞ்சம் கூடுதலாக விற்கப்பட்டுள்ளது என்று டோலிவுட் வட்டாரத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் படம் சுமார் 3.5 கோடி வரை வசூலித்துள்ளதாம். அதில் பங்குத் தொகையாக 1.9 கோடி கிடைத்துள்ளது. படம் லாபத்தைப் பெற இன்னும் 1.6 கோடியாவது வசூலிக்க வேண்டுமாம். அப்போதுதான் படம் லாபத்தைத் தரும் என்கிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக இப்படத்திற்கான ரசிகர்களின் தியேட்டர் வருகை குறைந்து காணப்படுகிறதாம்.
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் 'துணிவு' படம் லாபத்தைக் கொடுத்துள்ள நிலையில் தெலுங்கு மாநிலங்களில் பெரிய வரவேற்பைப் பெறாததற்குக் காரணம் அங்கு படத்தை சரியாக புரமோஷன் செய்யவில்லை என்கிறார்கள். அஜித், விஜய் போன்ற ஹீரோக்களின் படங்களை பான் இந்தியா படம் போல எப்போது புரமோஷன் செய்யப் போகிறார்கள் என அவர்களது ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதே உண்மை. அந்த விதத்தில் இரண்டு ஹீரோக்களும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பது ரசிகர்களுக்கும், படத்தின் வினியோக உரிமையை வாங்கியவர்களுக்கும் வருத்தமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.