ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனை கடந்துவிட்ட பிறகும் இன்றளவும் ஓவியாவுக்கு கிடைத்தது போன்ற புகழும், ரசிகர்களும் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா சினிமாவிலோ, சின்னத்திரையிலோ பெரிய அளவில் தோன்றவில்லை எனினும் சமூக வலைதளங்களில் அவருக்கான மவுசு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில், அண்மையில் இண்ஸ்டாகிராமில் ஓவியா லைவ் வந்த போது திடீரென ஒருநபர் ஓவியாவை முத்தமிடும் காட்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஓவியாவை முத்தமிட்ட நபர் யார்? பாய் பிரண்டா? என்ன செய்கிறார்? என கேள்விகளால் கமெண்ட் பாக்சை துளைத்து வருகின்றனர்.