டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இயக்குனர் மிஷ்கினும் விஜய்- 67 வது படத்தில் தான் வில்லனாக நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் அவர் கூறுகையில், இப்போதுதான் விஜய்யின் 67வது படத்தில் அவருடன் இணைந்து நடித்துவிட்டு வருகிறேன். இதற்கு முன்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த யூத் படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதன் பிறகு இப்போதுதான் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன் என்று விஜய் 67வது படத்தில் தான் வில்லனாக நடிப்பதை உறுதிப்படுத்தினார் மிஷ்கின். அதோடு, கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரும் இந்த விஜய் 67 வது படத்தின் 6 வில்லன்களில் ஒருவராக நடிப்பதாக இன்னொரு புதிய தகவலும் வெளியாகியிருக்கிறது.




