ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
பொங்கலை முன்னிட்டு நான்கு நாட்கள் முன்னதாக நேற்றே விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்தன. அதிகாலை காட்சிகளில் இருந்தே இரண்டு படங்களைப் பற்றியும் ரசிகர்களின் கமெண்ட்கள் சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழிந்தது. நேற்றைய டிவி விவாதங்களில் கூட 'வாரிசு, துணிவு' பற்றித்தான் விவாதமே நடத்தினார்கள். அந்த அளவிற்கு நேற்றைய செய்திகளில் இந்த இரண்டு படங்களும் முக்கியத்துவம் பெற்றது.
படம் வெளியான இரண்டாவது நாள் வழக்கம் போல ஆரம்பமாகும் சண்டை இன்று(ஜன., 12) காலையிலேயே ஆரம்பமாகிவிட்டது. நேற்று வெளியான இரண்டு படங்களில் எந்தப் படம் அதிக வசூலைக் குவித்தது என சமூக வலைத்தளங்களில் ஆளாளுக்கு ஒரு தொகையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். 'கிங் ஆப் ஓபனிங், தளபதி விஜய்' என இரண்டு டிரெண்டிங்குகள் டுவிட்டரில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
நான்கு வருடங்களுக்கு முன்பு பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' படங்களுக்கு இந்த 'நம்பர் கேம்' எப்படி சண்டையாக மாறியதோ அப்படி இந்த வருட பொங்கலுக்கு விஜய்யா, அஜித்தா யார் 'பாக்ஸ் ஆபீஸ் கிங்' என்ற சண்டை ஆரம்பமாகியுள்ளது. இரண்டு தயாரிப்பாளர்களும் படம் பற்றிய வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை ஏலம் விடுவது போல 20 கோடி, 40 கோடி, 50 கோடி என இன்று நிறைய கேட்கலாம்,.