மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் வெற்றி மாறன் ஓடிடியில் வெளியிடுவதற்கென்று படம் தயாரிக்கிறார், வெப் தொடர் தயாரிக்கிறார். ஓடிடி தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர்களில் முக்கியமானவராக இருக்கிறார். என்றாலும் ஓடிடியிலும் இயக்குனர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடந்த ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்டு அவர் பேசும்போது இதுகுறித்து கூறியதாவது: 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிடியில் படங்களை வெளியிடுவதில் அதிகமான சுதந்திரம் காணப்பட்டது. ஓடிடியில் படங்களை வெளியிடும்போது தயாரித்த பணத்தை எடுத்துவிடலாம். ஆனால் திரையரங்குகளில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. திரையரங்குகளில் படங்களை வெளியிடும்போது தயாரித்த செலவை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதேசமயம் போட்ட பணத்தை எடுக்க முடியாமலும் போகலாம்.
இந்த சுதந்திரம் ஓடிடியில் பறிக்கப்படுகிறது. வருங்காலத்தில் ஓடிடியில் குறிப்பிட்ட ஜானரில் படங்களை இயக்க வேண்டும் என்று இயக்குனர்களின் சுதந்திரம் பறிக்கப்படலாம். அதை நோக்கிய கதைகளை யோசிக்கும் கட்டாயம் இயக்குநர்களுக்கு உருவாக நேரும். மக்களுக்கான படம் எடுத்து அதை மக்களுக்காக திரையிடும்போது தான் சினிமாவின் முழு சுதந்திரம் இருக்கும்.
இவ்வாறு வெற்றி மாறன் பேசினார்.