மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் விஜய், அஜித் இருவரும் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். 9 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் நாளை ஜனவரி 11ம் தேதி நேரடியாக மோதுகிறார்கள். விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' படங்கள் நாளை வெளியாகின்றன.
9 ஆண்டுகளுக்கு முன்பு 2014ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு இருவரது படங்களும் ஜனவரி 10ம் தேதி வெளியானது. விஜய் நடித்த 'ஜில்லா', அஜித் நடித்த 'வீரம்' ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளிவந்தது. இப்போது இருப்பதை விட அப்போது அவர்களது வியாபார எல்லை குறைவாகவே இருந்தது. இருந்தாலும் இருவரது படங்களும் நேரடியாக மோதியது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு படங்களுமே வியாபார ரீதியாக சுமாரான வெற்றியைத்தான் பெற்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
கடந்த 9 ஆண்டுகளில் அவர்களது வளர்ச்சி எங்கோ சென்றுவிட்டது. நாளை வெளியாக உள்ள அவர்களது படங்களுக்கான முன்பதிவு அடுத்த ஒரு வாரத்திற்கு நடந்து முடிந்துவிட்டது. இருவரது படங்களுமே ஏட்டிக்குப் போட்டியாக புதிய வசூல் சாதனையைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.