ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ரஜினி நடித்த அண்ணாத்த படத்தை அடுத்து தற்போது சூர்யா நடிக்கும் 42வது படத்தை இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா. சரித்திர கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா 13 கெட்டப்புகளில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தற்போது வரை இந்த படத்தை சூர்யா-42 என்றுதான் அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு அஜித் நடிப்பில் தான் இயக்கிய வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்கள் வரிசையில் வி சென்டிமென்டில் ஒரு டைட்டிலை சிறுத்தை சிவா வைத்திருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் சூர்யாவின் 42வது படத்திற்கு வீர் என்று அவர் டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என்று தெரிகிறது.