அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 42வது படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 13 கெட்டப்புகளில் சூர்யா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மட்டுமே நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளை ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இயக்கி வருகிறார். சூர்யாவுடன் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் இணைந்து நடித்து வரும் இந்த சண்டை காட்சி ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் இந்த சண்டை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யா 42 வது படத்தின் முதல் பாகம் முடிவடைந்து ரிலீஸ் ஆனதும், இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என்றும் படக் குழுவில் தெரிவிக்கிறார்கள்.