விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் | இசை அமைப்பாளர் பயணம் தொடரும் : சக்திஸ்ரீ கோபாலன் |
2023 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதியே அஜித் நடிக்கும் 'துணிவு', விஜய் நடிக்கும் 'வாரிசு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. பொதுவாக முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை காட்சிகள் நடப்பது வழக்கம். ஆனால், ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வருவதால் எந்தப் படத்தை எத்தனை மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடத்துவதில் முதலில் குழப்பம் நீடித்ததாம்.
இப்போது பேச்சுவார்த்தை மூலம் அதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நடு இரவு 1 மணிக்கு 'துணிவு' படத்தையும், அதிகாலை 4 மணிக்கு 'வாரிசு' படத்தை தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகளாக திரையிட்டுக் கொள்ளலாமாம். காலை 8 மணி முதல் அவரவர் விருப்பப்படி காட்சிகளை திரையிட்டுக் கொள்ளுங்கள் என்று பேசி முடிவெடுத்திருப்பதாகத் தகவல்.
சிங்கிள் திரையரங்குகளில் 'துணிவு' படத்தை மட்டும் ரெகுலர் காட்சிகளாகத் திரையிட ஒப்பந்தம் செய்த தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு 'வாரிசு' படத்தையும், 'வாரிசு' படத்தை மட்டும் ரெகுலர் காட்சிகளாக ஒப்பந்தம் செய்த தியேட்டர்களில் அதிகாலை 1 மணிக்கு 'துணிவு' படத்தையும் திரையிட உள்ளார்களாம். இது எப்படி சரியாக வரும் என்று தெரியவில்லை. தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்கிறார்கள்.