ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

90களில் தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்து வந்தவர் ஜெகபதிபாபு. கடந்த பத்து வருடங்களாக குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டு தென்னிந்திய அளவில் மிகவும் பிசியான நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஏஎஸ் ஆக வேண்டுமென்பதை லட்சியமாக கொண்டுள்ள தூய்மைப் பணியாளர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவிக்கு அவரது படிப்புக்கு தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார் ஜெகபதிபாபு.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயலட்சுமி என்கிற மாணவி, தான் படித்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் சிவில் தேர்வுகளுக்கு தயாராவதற்கான பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்படுவதாகவும் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்த ஜெகபதிபாபுவின் தாயார் இது குறித்து தனது மகனிடம் கூறி அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து அந்தப்பெண்ணை சந்தித்த ஜெகபதிபாபு, அவர் ஐஏஎஸ் படிப்பை முடிப்பதற்கு தேவையான அனைத்து பொருளாதார உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.




