நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
கடந்த வருடம் மார்ச் மாதம் ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் இந்தியாவையும் தாண்டி, பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்று ஒவ்வொரு இடத்திலும் சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற பியாண்ட் பெஸ்ட் நிகழ்ச்சியில் இந்தப்படம் திரையிடப்பட்டது. இந்த திரையிடல் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உலகின் மிகப்பெரிய சைனீஸ் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியாகி அதன் புக்கிங் ஓபன் செய்யப்பட்ட நிலையில் 98 வினாடிகளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன என்கிற தகவலை தற்போது அந்த நிகழ்ச்சியை நடத்திய பியாண்ட் பெஸ்ட் அமைப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு இது போன்று எந்த ஒரு இந்திய படமும் இப்படி திரையிடப்பட்டது இல்லை.. காரணம் ஆர்ஆர்ஆர் படத்தைப் போல அதற்கு முன்பு எந்த ஒரு படமும் வந்ததும் இல்லை என்று கூறி இயக்குனர் ராஜமவுலிக்கு தனது நன்றியை தெரிவித்து உள்ளது பியாண்ட் பெஸ்ட் அமைப்பு.