ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படமான 'அவதார் - த வே ஆப் வாட்டர்' படம் கடந்த மாதம் வெளிவந்தது. இப்படம் உலக அளவில் தற்போது 1.5 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் உலக அளவில் அதிக வசூலைக் குவித்த படங்களின் டாப் 10 பட்டியலில் 'அவதார் 2' படம் இடம் பிடித்துள்ளது.
இந்திய அளவில் 'அவதார் 2' படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்த அளவில் உலக அளவிலான இப்படத்தின் வசூலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 2019ம் ஆண்டில் வெளிவந்த 'அவஞ்சர்ஸ் எண்ட் கேம்' படம்தான் உள்ளது. அந்த வசூலை 'அவதார் 2' முறியடிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
'அவதார் 2' படத்தின் இதுவரையிலான மொத்த வசூலான 1.5 பில்லியன் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 12,938 கோடி ரூபாய்.




