மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள வி3 என்கிற படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த வாரம் வெளிவந்துள்ள ஒரே படம் இதுதான். இந்த படத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருத்தி இரவு நேரத்தில் தனியாக மொபட்டில் வீடு திரும்பும்போது 5 சமூக விரோதிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். போலீசார் அப்பாவிகளை குற்றவாளியாக்குகிறார்கள், உண்மையான குற்றவாளிகளை விசாரணை அதிகாரி வரலட்சுமி கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.
இந்த படம் நேற்று பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண் கடைசியாக பேசும்போது “இதுபோன்ற பாலியல் குற்றங்களை தடுக்க விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை விடுகிறார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் படத்தின் இயக்குனர் அமுதவாணனிடம் கேட்டபோது. “இதை இன்று நானோ, என் படமோ மட்டும் கேட்கவில்லை. பல ஆண்டுகளாக முன்வைக்கப்படும் கோரிக்கை இது. உளவியல் ரீதியாகவும் இதை இப்படித்தான் அணுக வேண்டும் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார். வளர்ந்த பல நாடுகளே பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கி இருக்கிறார்கள். மும்பையில் சிவப்பு விளக்கு பகுதி அரசின் அனுமதியோடுதான் செயல்பட்டு வருகிறது. இதைத்தான் படத்தில் சொல்கிறோம். இது நிரந்தர தீர்வல்ல. ஆனால் பாலியல் கொடுமைகளால் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்க இதுதான் தற்காலிக தீர்வாக இருக்கும்” என்றார்.