வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பை நேற்று டிரைலருடன் வெளியிடாமல் நள்ளிரவில் தனியாக அறிவித்தார்கள். முன்னதாக 'வாரிசு' படம் ஜனவரி 12ம் தேதிதான் வெளியாகும் என வெளிநாட்டில் உள்ள தியேட்டர்களில், குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவை ஆரம்பித்தனர். அந்த இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் தீடீரென பட வெளியீட்டுத் தேதியை ஜனவரி 11 என அறிவித்தது. இதனால், பிரிமீயர் காட்சி பார்க்கவும், முதல் நாள் முதல் காட்சி பார்க்கவும் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. படம் இந்தியாவில் 11ம் தேதி வெளியாவதால் அமெரிக்காவில் 10ம் தேதி பிரிமீயர் காட்சியை நடத்த வேண்டியதாகிவிட்டது. இப்போது பல தியேட்டர்களில் 10ம் தேதிக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளார்கள்.
சில தியேட்டர்களில் 11ம் தேதி பிரிமீயருக்காக முன்பதிவு செய்யப்பட்டவர்கள் வேண்டுமானால் 10ம் தேதி காட்சிக்கு தங்களது முன்பதிவை மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லி உள்ளார்களாம். படக்குழு செய்த அறிவிப்பால் வெளிநாடுகளில் இப்போது தேவையற்ற குழப்பம் நிலவுகிறது. படத்தை அங்கு வெளியிடும் வினியோகஸ்தர்கள் வெளியீடு தேதி பற்றி தாங்கள் எதுவும் முடிவு செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.