அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் |
2015ம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கிய இந்த படத்தில் கமல், ஊர்வசி, ஜெயராம், பூஜா குமார், பார்வதி, நாசர், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்திருந்தார்கள். ராஜ்கமல் பிலிம்சுடன் திருப்பதி பிக்சர்சும் இணைந்து தயாரித்தது. பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் பெரும் தோல்வி அடைந்தது. இதில் முதலீடு செய்த இயக்குனர் லிங்குசாமி பெரும் நஷ்டத்தை அடைந்தார். அதன்பிறகு அவரால் பொருளாதார ரீதியாக எழுந்து நிற்க முடியவில்லை.
இந்த நிலையில் உத்தம வில்லன் படத்தால் நஷ்டம் அடைந்து லிங்குசாமிக்கு ஒரு படம் பண்ணித் தருவதாக கமல் வாக்குறுதி அளித்திருக்கிறார். இதுகுறித்து லிங்குசாமியே தெரிவித்தார். லிங்குசாமி ஸ்பிளிட் ஸ்கிரீனிங் முறையில் ஒரே திரையில் இரண்டு படங்களாக காட்டப்படும் பிகினிங் என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
இந்த படத்தின் அறிமுக விழாவில் பேசும்போது இந்த தகவலை அவர் வெளியிட்டார். அவர் பேசியதாவது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிக சவாலாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. இது விருது படமோ, ஓடிடி படமோ கிடையாது, திரையரங்கிற்கான படம் . இப்படம் வெளியானதும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன். 'பிகினிங்' படத்தைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் பல நல்ல படங்களை வெளியிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், போல் சரியான ஆட்கள் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவளிப்பேன். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சிதான்.
என் இயக்கத்தில் இரண்டு, மூன்று மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 'உத்தம வில்லன்' படத்தை திறமையாக, கடின உழைப்போடு தான் எடுத்தார்கள். ஆனால், அப்படத்தால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது உண்மைதான். முதலில் நாங்கள் தயாரிக்க முடிவெடுத்தது பாபநாசம் தான். ஆனால், கமல் ஆசைப்பட்டதால் 'உத்தம வில்லன்' படத்தை எடுத்தோம். அது அவருக்கும் தெரியும். 'உத்தமவில்லன்' படத்தின் நஷ்டத்தை ஈடுசெய்ய கமல் ஒரு படம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.