லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பத்து தல'. கவுதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்று மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பத்து தல படத்தின் டப்பிங்கை ஒவ்வொருவராக முடித்து வருகின்றனர். சமீபத்தில் கவுதம் கார்த்திக் டப்பிங்கை முடித்தார். இப்போது பிரியா பவானி சங்கர் டப்பிங்கை நிறைவு செய்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.