ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் மைக்கேல். விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கௌஷிக் மற்றும் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகும் மைக்கேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் இப்படத்தி ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வரும் பிப்ரவரி 3ல் படம் வெளியாகவுள்ளது. இதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.