ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ். இவருக்கு இந்திய அரசின் சார்பில் சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டது. கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதற்காக இந்தியா வந்த மைக்கேல் டக்ளஸ் கோவா பட விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசினார்.
திரைப்பட விழா நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற மைக்கேல் டக்ளஸ் பேசியிருப்பதாவது: இந்த திரைப்பட விழாவில் 78 நாடுகள் பிரநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே இந்த விழாவின் தனித்துவம் மற்றும் அழகு என கருதுகிறேன். இது உலக அளவில் புகழ்பெற்று தாக்கம் செலுத்தும் இந்தியப் படங்களின் பிரதிபலிப்பு. இந்தியா சிறந்தவர்களின் கரங்களில் இருப்பதாக நினைக்கிறேன். அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளாக திரைப் படங்களின் தயாரிப்பு மற்றும் நிதியுதவிக்கு அதிக பணம் செலவிடப்பட்டதை அறிகிறேன். இது இந்திய படங்களுக்கு வெற்றிகரமான காலகட்டம்.
இவ்வாறு அவர் பேசினார்.