பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது . இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. இதில் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கவுதம் மேனன், மனோபாலா , மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கதாநாயகியாக திரிஷாவும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்தும் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு 10 நாட்கள் சென்னையிலேயே நடைபெறும் என கூறப்படுகிறது. தொடர்ந்து தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி ப்ர்ஸ்ட் காப்பியை வரும் மே இறுதிக்குள் உருவாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.