பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
தமிழில், யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கேப்டன் மில்லர் படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். இவர் நடித்து கடந்த வருடம் வெளியான படம், 'மைக்கேல்'. இதில் விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி, அனுசுயா, திவ்யன்ஷா உட்பட பலர் நடித்தனர். தமிழ், தெலுங்கில் உருவான இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், அதன் தோல்விக்கு காரணம் பற்றி சந்தீப் கிஷன் கூறுகையில், “மைக்கேல் படம் சரியாக ஓடவில்லை. எனக்கும் அந்தப் படத்தின் இறுதி வடிவம் பிடிக்கவில்லை. அதை இயக்குனரிடமே சொன்னேன். எடிட்டிங்கில் ஏதேனும் மேஜிக் நடந்திருந்தால் சிறந்த படமாக வந்திருக்கும். ஆரம்பத்தில் சில காட்சிகளைப் பார்த்தபோது நன்றாக இருந்தது. முழு படமாக அது ஏமாற்றிவிட்டது. அந்தப்படத்தை 3 பேர் தயாரித்தனர். 2 பேர் அது நன்றாக ஓடும் என்று நம்பினர். ஒருவர், ரிலீஸுக்கு 12 நாட்களுக்கு முன், படம் சரியாக இல்லை என்றார். ரிலீஸ் நாள் நெருங்கிவிட்டதால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனாலும் தொழில்நுட்ப ரீதியில் 'மைக்கேல்' சிறந்த படம். அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கதைக்கு கொடுக்க தவறிவிட்டோம்” என்றார்.