வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
சினிமா என்பது ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையாகவே காலம் காலமாக இருந்து வருகிறது. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் எப்போதோ ஒரு முறைதான் வரும். ஆனால், கடந்த வருடக் கடைசி வெளியீடாக கடந்த வாரம் வெளிவந்த படங்களில் 'ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, ஓ மை கோஸ்ட்' ஆகிய படங்கள் ஹீரோயின்களை முதன்மைப்படுத்திய படங்களாக வெளிவந்தன. அதற்கு முன் வாரம் நயன்தாரா நடித்த 'கனெக்ட்' படமும் அப்படிப்பட்ட ஒரு படம்தான்.
சென்னை, குரோம்பேட்டையில் உள்ள பிரபலமான வெற்றி, ராகேஷ் தியேட்டர் காம்ப்ளக்சில் 'கனெக்ட், ராங்கி, டிரைலவர் ஜமுனா, செம்பி' ஆகிய படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. தியேட்டர் முன்பாக அந்த பேனர்கள் இடம் பெற்றுள்ளன. அதைப் படம் பிடித்து ஒரு ரசிகர், “குரோம்பேட்டை வெற்றி தியேட்டரைக் கடக்கும் போது, பெண்கள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களின் பேனர் இருப்பதை நானும் எனது சகோதரியும் பார்த்தோம். தமிழ் சினிமாவு எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பாக இப்படியெல்லாம் நடக்கும் என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. பொதுவாக வெற்றி தியேட்டரில் எப்போதும் ஆண்கள் அவர்களது வலிமையைக் காட்டும் பேனர்கள்தான் வரிசைகட்டி இருக்கும். எங்களது குழந்தைக் காலத்தின் பாதியை அந்தத் தியேட்டரில் கழித்த எங்களுக்கு அது எப்படிப்பட்ட மகிழ்ச்சி என்பதைச் சொல்ல முடியாது,” என்று ஒரு நீண்ட பதிவிட்டிருந்தார்.
அந்த ரசிகரின் டுவீட்டை ரிடுவீட் செய்த நடிகை சமந்தா, “பெண்களின் எழுச்சி” என அதைக் குறிப்பிட்டிருந்தார். குரோம்பேட்டையை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா, நடிகையாவதற்கு முன்பாக அந்தத் தியேட்டரில் பல படங்களைப் பார்த்திருக்கலாம். அதனால்தான், அதை ரிடுவீட் செய்திருக்கிறார் போலிருக்கிறது.