இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சமந்தா கதையின் நாயகியாக நடித்த யசோதா படம் சமீபத்தில் வெளியான நிலையில் குஷி, சாகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது சாகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படம் கடந்த நவம்பர் நான்காம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தாமதமாவதாக சொல்லி ரிலீஸ் செய்தியை ஒத்தி வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் சாகுந்தலம் படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் 3டி டெக்னாலஜியில் வெளியாகும் இந்த சாகுந்தலம் படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் சமந்தாவுடன் அதிதி பாலன், மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், கபீர் சிங் நடித்த பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.