இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சிரஞ்சீவி உடன் வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணா உடன் வீர சிம்ஹா ரெட்டி, பிரபாஸ் உடன் சலார் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவற்றில் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள படங்கள் வருகிற சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்த ஒரு பேட்டியில் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பது ஏன்? என்று ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு அவர், நடிப்பு துறையில் வயது குறைந்தவர்கள் வயது அதிகமானவர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் நான் பார்ப்பதில்லை. வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் யாருடனும் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். அதுமட்டுமின்றி வயதான ஹீரோக்களுடன் இரு மடங்கு வயது குறைவான நடிகைகள் ஜோடி சேர்ந்து நடிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது நீண்ட காலமாகவே சினிமாவின் நடைபெற்று வருகிறது. இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. அதிகம் சம்பளம் தரப்படுவதினால் தான் இது போன்ற ஹீரோக்களுடன் நான் நடிப்பதாக ஒரு கருத்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் தான் வாங்குகிறேன். இளம் ஹீரோ, வயதான ஹீரோ என்றெல்லாம் நான் யாரையும் பிரித்து பார்ப்பதில்லை என்கிறார் ருதிஹாசன்.