ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்குத் திரையுலகின் மறைந்த நடிகையும் இயக்குனருமான விஜய நிர்மலாவின் மகன் நடிகர் நரேஷ். நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணன். 60 வயதை நெருங்கும் நரேஷ் இரு தினங்களுக்கு முன்பு குணச்சித்திர நடிகையான பவித்ராவுக்கு முத்தம் கொடுத்த வீடியோவைப் பகிர்ந்து அவர்களது காதலை அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பு மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர் நரேஷ். ஒவ்வொரு மனைவிக்கும் ஒவ்வொரு மகன் இருக்கிறார்கள். முதலிரண்டு மனைவிகைள நரேஷ் விவாகரத்து செய்துவிட்டாராம். பவித்ரா தெலுங்கில் பல படங்களிலும் தமிழில் 'அயோக்யா, கபெ ரணசிங்கம், கூகுள் குட்டப்பா, வீட்ல விசேஷம்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பவித்ரா ஏற்கெனவே திருமணமானவர். அதன் பின் சுசேந்திரா பிரசாத் என்பவருடன் லிவிங் டு கெதராக வாழ்ந்துள்ளார். அவரைப் பிரிந்த பின் நரேஷ உடன் லிவிங் டு கெதராக வாழ்ந்து வருகிறார் என டோலிவுட்டில் கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கள் பரவியது.
இந்நிலையில் நரேஷ், பவித்ரா இருவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டிவிட்டு, உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக் கொண்ட வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, “புத்தாண்டு, புதிய ஆரம்பம், உங்கள் அனைவரின் ஆசீர்வாதம் வேண்டும், எங்களிடமிருந்து உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளனர். டோலிவுட்டின் தற்போதைய பரபரப்பு இந்த வீடியோ தான்.