பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் அவர்களது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ள படம் 'கனெக்ட்'. அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கேர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த வாரம் டிசம்பர் 23ம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.
பொதுவாக நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் எந்த விதமான புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வர மாட்டார். எவ்வளவு பெரிய ஹீரோ ஜோடியாக நடித்தாலும் அப்படங்களுக்காக ஒப்பந்தம் போடும் போதே எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டேன் என குறிப்பிட்டுவிடுவார் என்று திரையுலகத்தில் சொல்வார்கள்.
இந்நிலையில் 'கனெக்ட்' படத்தின் சிறப்புக் காட்சிகளை நேற்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் இரண்டு காட்சிகளாக நடத்தினார்கள். முதல் காட்சி பத்திரிகையாளர்களுக்காகவும், இரண்டாவது காட்சி படக் குழுவினர், சினிமா பிரபலங்களுக்காகவும் நடத்தினார்கள். அவற்றில் நயன்தாரா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அது மட்டுமல்ல 'கனெக்ட்' படத்திற்காக தமிழ், தெலுங்கில் வீடியோ பேட்டிகளையும் கொடுத்திருக்கிறார். தமிழ் பேட்டியை பிரபல தொகுப்பாளினி டிடி--யும், தெலுங்கு பேட்டியை சுமா கனகல்லா--வும் எடுத்திருக்கிறார்கள். பேட்டிகளின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.