பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் |
2022ம் ஆண்டின் ரீ-வைண்ட் விவரங்களை பலரும் ஆரம்பித்துவிட்டனர். உலக அளவில் தேடுதல் இணையதளமான கூகுள் இந்திய அளவில் 2022ம் ஆண்டில் டாப் 10 இடங்களைப் பெற்ற பல வகையான விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் திரைப்படங்களுக்கான தேடுதல் பட்டியலில் தமிழ்ப் படமான 'விக்ரம்' மட்டுமே இடம் பிடித்துள்ளது. அந்தப் படம் டாப் 10 பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த டாப் 10 பட்டியலில் 5 தென்னிந்திய மொழிப் படங்களும், 4 ஹிந்திப் படங்களும், ஒரு ஹாலிவுட் திரைப்படமும் இடம் பிடித்துள்ளன. டாப் 10 பட்டியலில் ஹிந்திப் படமான 'பிரம்மாஸ்திரா' படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில்தான் இந்தப் படத்தைப் பற்றி அதிகம் பேர் தேடியுள்ளனர்.
7ம் இடம் பிடித்த 'விக்ரம்' படத்தை புதுச்சேரி, தமிழகத்தில்தான் அதிகம் பேர் தேடியுள்ளனர். மற்ற மாநிலங்களில் அதில் பாதியளவுக்கும் குறைவாகத்தான் தேடியுள்ளனர்.
இந்திய அளவில் கூகுள் தேடலில் 2022ல் டாப் 10ல் இடம் பிடித்துள்ள படங்கள்…
1.பிரம்மாஸ்திரா - பாகம் 1 - சிவா
2.கேஜிஎப் 2
3.த காஷ்மீர் பைல்ஸ்
4.ஆர்ஆர்ஆர்
5.காந்தாரா
6.புஷ்பா - த ரைஸ்
7.விக்ரம்
8.லால் சிங் சத்தா
9.த்ரிஷ்யம் 2
10.தோர் - லவ் அன்ட் தண்டர்