ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஜெயம்ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் மீடியாக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது: இந்த படத்தின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே எங்களுக்கு ஏகப்பட்ட ஆதரவு கிடைத்தது. டிரைலர் வெளியான பிறகு படம் நல்லா இருக்கும் என அனைவரும் நம்பினார்கள். அதனால் எங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது.
படத்தின் விமர்சனங்கள் லவ் டுடேவை இந்த வருடத்தின் டாப் 10 படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. கோமாளி படத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைத்தது. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறேன். மக்கள் ஆதரிக்கக்கூடிய படங்களை உருவாக்க முயற்சிப்பேன். இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்ததற்கு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.