Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதியின் 46வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

11 நவ, 2022 - 03:53 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi's-DSP-movie-first-look-released

காத்து வாக்குல ரெண்டு காதல், மாமனிதன் படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள அவரது 46வது படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடிக்க, பிக்பாஸ் ஷிவானி, குக் வித் கோமாளி புகழ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது.

இப்படத்திற்கு விரிச்சன், டிஎஸ்பி உள்பட பல டைட்டில்களை பரிசீலித்து வந்த இயக்குனர் பொன்ராம், தற்போது டிஎஸ்பி என்று பெயர் வைத்து போஸ்டரை வெளியிட்டுள்ளார். சேதுபதி படத்திற்குப் பிறகு இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அவர் டிஎஸ்பி உடையில் கம்பீரமாக பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் ஒரு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், வாழ்த்துக்கள் மை ஹீரோ. உங்களை போலீஸ் உடையில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அண்ணா பிக்பாஸ் போய் மாறிட்டான் - ஐஸ்வர்யா ராஜேஷ்அண்ணா பிக்பாஸ் போய் மாறிட்டான் - ... தனுஷின் வாத்தி படத்தின் வா... வாத்தி - லிரிக் வீடியோ வெளியானது! தனுஷின் வாத்தி படத்தின் வா... வாத்தி - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)