லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சமந்தா நடித்துள்ள பான் இந்தியா படமான யசோதா நாளை மறுநாள் (11ம் தேதி) வெளிவருகிறது. யசோதா படத்தை முதலில் தமிழ் தயாரிப்பாளர்கள்தான் தயாரிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர்கள் நிராகரித்து விட்டதால் தெலுங்கு தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் சினிமாத் துறையில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன். 45 படங்களை வெளியிட்டிருக்கிறேன். 'ஆதித்யா 369' படத்தை தயாரித்தேன். இப்போது யசோதாவை தயாரித்திருக்கிறேன். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனது நெருங்கி உறவினர் அவர் இறந்த நேரத்தில் அந்த குடும்பத்திற்கு ஆறுதலாக சென்னையில் தங்கி இருந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய நிர்வாகத் தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதற்காக ஹரி மற்றும் ஹரிஷிடம் இருந்து 'யசோதா' படத்தின் கதை கேட்டேன். தனித்துவமான இந்தக் கதை எனக்கு பிடித்திருந்தது.
கோவையைச் சேர்ந்த சில தயாரிப்பாளர்களும் இந்தக் கதையைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். அதனால் நான் சற்று விலகிக் கொண்டேன். நான் ஐதராபாத் சென்றதும் எனது நிர்வாகத் தயாரிப்பாளர் என்னிடம் வந்து, இந்தப் படத்தில் இருந்து தமிழ் தயாரிப்பாளர்கள் பின் வாங்கி விட்டார்கள். நீங்கள் இப்போது படத்தைத் தயாரிக்க ஆர்வமாக உள்ளீர்களா எனக் கேட்டார்.
பின்பு, இந்தக் கதையை நான் மீண்டும் ஒருமுறை கேட்டுவிட்டு இன்னும் டெவலப் செய்து வரும்படி கேட்டுக் கொண்டேன். 8 மாதங்கள் கழித்து மீண்டும் திரைக்கதையில் வேலை பார்த்து இன்னும் மெருகேற்றி வந்தார்கள். பல விவாதத்திற்குப் பிறகு இந்தப் படத்தை பான் இந்தியா படமாக பெரிய அளவில் வெளியிட முடிவு செய்தோம்.
யசோதா கதாபாத்திரத்தில் நடிக்கவும் சரியான நபராக சமந்தா இருப்பார் என நினைத்தோம். 'பேமிலி மேன்2' வெப் சீரிஸ் மூலம் தேசிய அளவில் பார்வையாளர்களின் கவனத்தை சமந்தா கவர்ந்திருந்தார். அதனால், அவர் இந்தக் கதையைக் கேட்பாரா என்ற சந்தேகமும் இருந்தது. சமந்தா எல்லாருடைய கதைகளையும் கேட்கத் தயாராக இருப்பதாக அவரின் மேலாளர் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். கதையைக் கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டார். மேலும், பல மொழிகளில் வெளியாவதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார். .
சமந்தாவின் உடல்நிலைப் பற்றி அவர் படம் முடித்ததும் டப்பிங்கின் போது தெரிய வந்தது. அவர் தெலுங்கில் டப்பிங் பேசிய அதே சமயம் தமிழிலும் அவர் டப்பிங் பேசினார். அப்போது அவர் எனர்ஜி லெவல் குறைவாகவே இருந்தது. வேறு டப்பிங் கலைஞரைக் கொண்டு வரலாம் என நாங்கள் கருத்து தெரிவித்தோம். அவர் குரல் தமிழில் அனைவருக்கும் தெரியும் என்பதால் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் டப்பிங் பணிகளை மேற்கொண்டார். அவரின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். சமந்தாவின் உடல்நிலை, பற்றி அவர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு சில நாட்கள் முன்புதான் எங்களுக்கும் தெரிய வந்தது. இந்தியில் சமந்தாவுக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.