விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

தமிழ் சினிமாவில் இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். பல தமிழ்ப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு, அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் ஹிந்திப் படமான 'ஜவான்' படத்திலும் நடித்து வருகிறார்.
அடுத்து பிரபாஸ் தற்போது நடித்து வரும் புதிய பான் இந்தியா படம் ஒன்றிலும் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் புதிய படம் ஒன்று எந்த அறிவிப்பும் இல்லாமல் ஆரம்பமாகி அதன் படப்பிடிப்பு தற்போது ஐதாராபாத்தில் நடந்து வருகிறது. மாளவிகா மோகனன் அப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதில் கலந்து கொண்டு யோகிபாபு நடித்து வருகிறார் என டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான யோகி பாபு, ஹிந்தியில் 'ஜவான்', தெலுங்கில் பிரபாஸ் படம் என நடித்து பான் இந்தியா நடிகராகவும் மாறி வருகிறார்.