ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
தீபாவளிக்குப் பிறகு இரண்டு வார இடைவெளியில் பல புதிய படங்கள் வெளிவருவது வழக்கம். அது போல இந்த வார வெள்ளிக்கிழமையில் சில மீடியம் பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. 'கோமாளி' படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நாயகனாக அறிமுகமாகும் 'லவ் டுடே', அசோக் செல்வன் மற்றும் மூன்று கதாநாயகிகள் நடிக்கும் படமாக வெளிவரும் 'நித்தம் ஒரு வானம்', சுந்தர் சி இயக்கத்தில் மல்டி மீடியம் ஸ்டார்களான ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் மற்றும் நான்கைந்து கிளாமர் கதாநாயகிகள் நடிக்கும் 'காபி வித் காதல்' ஆகிய நேரடிப் படங்கள் வெளியாக உள்ளன. இவற்றோடு 'ஒன் வே' என்ற தமிழ்ப் படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னடத்திலிருந்து தமிழிலும் டப்பிங் ஆகி பான் இந்தியா படமாக வெளிவர உள்ள 'பனாரஸ்' படமும் வெளியாக உள்ளது. இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட கிழக்குப் பருவ மழை ஆரம்பமாகியுள்ளது. வரும் நவம்பர் 4ம் தேதி வரை மழையின் தீவிரம் இருக்கும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று முதலே மழை ஆரம்பமாகி உள்ளதால் ஏற்கெனவே வெளியாகியுள்ள படங்களுக்கு முன்பதிவுகள் மிகவும் மோசமாக உள்ளது. கன மழை பெய்தால் காட்சிகள் நடைபெறாமல் போகவும் வாய்ப்புகள் உண்டு. இதனால், வரும் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள படங்களுக்கு மழையின் காரணமாக எதிர்பார்த்தபடி முன்பதிவு நடைபெறுமா என்ற அச்சத்தில் அப்படக்குழுவினர் உள்ளனர். மழை பெய்தாலும் சினிமா பார்ப்போம் என்ற தீவிர ரசிகர்கள் வந்தால் மட்டுமே அப்படங்களுக்கு சுமாரான முன்பதிவு நடக்கும்.