ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' |
ஜெயந்திரா இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான 'பனாரஸ்க் வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.
துளு படத்தில் நடித்து வந்த சோனால் மாண்டெய்ரா அதன்பிறகு கன்னடத்தில் அறிமுகமாகி அங்கு பிசியான நடிகை ஆனார். இந்த படத்தின் மூலம் அவர் பான் இண்டியா நடிகை ஆகிறார். டோனி, பெல்பாட்டம், பியூட்டிபுல் மனசுகுலு படங்களை இயக்கிய ஜெயேந்திரா இந்த படத்தை இயக்கி உள்ளார். அஜனீஸ் லோக்நாத் இசை அமைத்துள்ளார், அத்விதா குருமூர்த்தி இயக்கி உள்ளார். திலக்ராஜ் பலாலி தயாரித்துள்ளார்.
பட்டு புடவைக்கு புகழ்பெற்ற பனாரஸ் நகரில் நடக்கும் காதல் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. தற்போது ட்ரால் என தலைப்பிடப்பட்டுள்ள புதிய பார்ட்டி பாடல் வெளியாகியுள்ளது. அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜெஸ்ஸீ கிஃப்ட் பாடியுள்ளார். பாங்காங்கில் ஒரு பெரிய கூட்டத்தில் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.