சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு | பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் |

2022ம் ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்று 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் கமல்ஹாசனின் திரையுலகப் பயணத்தில் பெரும் சாதனை படைத்த படமாக விளங்கியது. 400 கோடிக்கும் மேல் வசூலித்து தமிழ்த் திரையுலகின் முந்தைய சாதனைகளை முறியடித்தது.
ரசிகர்களால் 'தரமான' ஒரு படம் என பாராட்டப்பட்ட 'விக்ரம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மீது இந்தியத் திரையுலகத்தின் பார்வை விழுந்துள்ளது. தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ஹீரோக்களும் அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தகவல். இதனிடையே 'விக்ரம்' படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
அடுத்து விஜய்யின் 67வது படம், 'கைதி 2' ஆகிய படங்களை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் தீபாவளி தினத்தில் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். அது பற்றிய புகைப்படத்தை அவர் பதிவிடாமல் லோகேஷின் நெருங்கிய நண்பரும், இயக்குனரும், 'விக்ரம்' படத்திற்க லோகேஷுடன் இணைந்து வசனம் எழுதி ரத்னகுமார் பதிவிட்டுள்ளார்.
லோகேஷ், கமல்ஹாசன் சந்தித்த புகைப்படத்தைப் பதிவிட்டு, “தீபாவளி எப்படி போச்சுடான்னு கேட்டால், இந்த போட்டோ காமிச்சான்… என்றென்றும் ஊக்கமளிக்கும் பயணம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




