மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
செப்டம்பர் மாதத்தில் வெளியான இரண்டு படங்களான 'பொன்னியின் செல்வன், காந்தாரா' ஆகிய படங்கள் மொத்தமாக 700 கோடியை வசூலித்து சாதனை புரிந்துள்ளன. தமிழில் தயாரான 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவந்தது. அதே தினத்தில் கன்னடத்தில் தயாரான 'காந்தாரா' படம் வெளிவந்தது. வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் இந்தப் படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
200 கோடி செலவில் இரண்டு பாகங்களாக தயாரான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் மட்டும் 500 கோடி வசூலைத் தொட உள்ளது. 15 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 'காந்தாரா' படத்தின் வசூல் 'பொன்னியின் செல்வன்' வசூலை விட அதிகமாக இருக்கிறது. சொல்லப் போனால் 'பொன்னியின் செல்வன்' படத்தை விடவும் மற்ற மொழிகளில் 'காந்தாரா' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
தியேட்டர்களில் ஒன்றுக்கொன்று போட்டியிட்ட இரண்டு படங்களும் ஓடிடி வெளியீட்டிலும் மோத உள்ளன. இரண்டு படங்களும் அமேசான் ஓடிடி தளத்தில் நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களுக்கும் ஓடிடி தளத்திலும் போட்டியுடன் கூடிய அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.