தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்ட இப்படத்தின் முதல் பாகம்தான் கடந்த வருடம் வெளிவந்தது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் கூட இப்படம் நல்ல வசூலைப் பெற்றது. தமிழில் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போதோ ஆரம்பமாக வேண்டியது. ஆனால், படத்தின் இயக்குனர் சுகுமார் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமா எடுக்கத் திட்டமிட்டதால் கதையில் சில மாற்றங்களைச் செய்து எழுதியதாக சொல்லப்பட்டது. இப்போது இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“'புஷ்பா த ரூல்' படத்தின் வேலைகள் முழு மூச்சுடன் நடந்து வருகிறது. அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார், பிரபலங்களின் போட்டோகிராபர் அவினாஷ் கவுரிக்கர், டிசைனர் டியூனி ஜான் மற்றும் மொத்த குழுவினரும் சிறப்பானவற்றைக் கொடுக்க தங்கள் முயற்சிகளில் உள்ளார்கள்,” என படத்தின் போட்டோ ஷுட் நடப்பது பற்றி புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்கள்.