சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது தமிழில் 'இந்தியன் 2' படத்தையும், தெலுங்கில் ராம் சரணின் 15வது படத்தையும் ஒரு சேர இயக்கி வருகிறார். கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தைத்தான் முதலில் ஆரம்பித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே அவர் தற்போது இயக்கி வரும் தெலுங்குப் படத்தின் அறிவிப்பும் வெளிவந்தது.
ஒரு கட்டத்தில் கிரேன் விபத்து, இயக்குனர், தயாரிப்பார் பிரச்சினை, கொரோனா தாக்கம் என 'இந்தியன் 2' படப்பிடிப்பு நின்று போனது. மீண்டும் நடக்குமா நடக்காதா என்ற நிலையில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்தின் வெற்றியும், வசூலும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாக ஒரு காரணமாக இருந்தது. படக்குழுவினர் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கடந்த மாதம் 'இந்தியன் 2' படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பித்தனர்.
'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமானதும் ஷங்கர், ராம் சரண் இணைந்து பணியாற்றி வந்த தெலுங்குப் படம் பற்றி அங்கு கிசுகிசுவை பரப்பினர். படத்தின் பட்ஜெட் எகிறியதாலும், படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் தில் ராஜு திருப்தி அடையவில்லை என்றும் செய்திகள் வர ஆரம்பித்தன. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ராஜமுந்திரியில் அப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி உள்ளது. ஷங்கர், ராம் சரண் ஆகியோர் படப்பிடிப்பில் உள்ளார்களாம். அடுத்த ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
'இந்தியன் 2, ராம் சரண் 15வது படம்' என இரண்டையும் மாறி மாறி இயக்கி சீக்கிரமே படப்பிடிப்புகளை முடிக்க ஷங்கர் தனித் தனி குழுக்களை வேலைக்கு அமர்த்தி உள்ளதாகத் தகவல். இரண்டு படங்களையுமே 2023ல் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.