ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ் சினிமா உலகில் எப்போதாவது ஒரு முறைதான் இந்த மாதிரியான அதிசயம் நடக்கும். அப்படி ஒரு அதிசயத்தை 'பொன்னியின் செல்வன்' படம் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 1000 தியேட்டர்கள் இருந்தாலும் சுமார் 7 கோடி வரை மக்கள் வசித்தாலும், சில லட்சம் பேர்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு வருகிறார்கள். ஒரு படம் நன்றாக இருந்தால் மட்டும் அப்படத்திற்குக் கூடுதலாக சில நாட்கள் ரசிகர்கள் வருகை இருக்கும்.
கடந்த சில வருடங்களாக அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனோ தாக்கத்தால் தியேட்டர்களுக்கு மக்கள் வருகை குறைந்து போனது. ஓடிடி தளங்கள் வந்ததாலும் தியேட்டர்களுக்கு எப்போதோ வருகிறவர்களும் கூட ஒரு மாதம் காத்திருந்து புதிய படங்களை தியேட்டர்களில் பார்த்தார்கள்.
ஆனால், 'பொன்னியின் செல்வன்' படம் தியேட்டர்களுக்கு வருவதை கடந்த சில வருடங்களாக நிறுத்திவிட்ட முதியோர்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்திருக்கிறது. அதிகாலை 4.30 மணி சிறப்பு காட்சியிலேயே பல முதியோர்களைப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் குடும்பம் குடும்பமாக கைக் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தாய்மார்களும், தங்கள் வயதான பெற்றோர்களை அழைத்துக் கொண்டும் பலரும் வந்து போகிறார்கள் என தியேட்டர் வட்டாரங்கள் மகிழ்ச்சியாக உள்ளன.