பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு |
கடந்த 2020ம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று டில்லியில் நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மூ அவர்கள் கையால் சாதனையாளர்கள் அனைவரும் விருது பெற்றனர். இந்த விருது வழங்கும் நிகழ்வில் ஹைலைட்டாக அமைந்தது அய்யப்பனும் கோஷியும் என்கிற படத்தில் இடம்பெற்ற கலக்காத்தா சந்திரமேரா என்கிற பாடலை பாடிய நாட்டுப்புற பாடகி நஞ்சம்மா விருது பெற்றபோது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றுதுதான்.
குறிப்பாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த, இன்று மிக உயரிய பதவி வகிக்கும் ஜனாதிபதியின் கைகளால் மிக உயரிய விருதான தேசிய விருதை இன்னொரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பெற்றது நெகிழ்ச்சியான நிகழ்வாக அனைவராலும் பாராட்டப் பெற்று வருகிறது. இந்த நிலையில் அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கிய மறைந்த இயக்குனர் சாச்சியின் மனைவி ஷிஜி, இந்த படத்தின் சிறந்த இயக்குனருக்கான விருதை தனது கணவருக்கு பதிலாக பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வு பற்றி ஷிஜி கூறும்போது, “இதற்கு தானே ஆசைப்பட்டீர்கள் சாச்சி.. எப்படியும் ஒருநாள் தேசிய விருது பெறும் நிகழ்வில் ஜனாதிபதி உடனான விருந்தில் நாம் இருப்போம் என்று கூறினீர்கள்.. இன்று அது நடந்து விட்டது. அதேபோல நாட்டுப்புற பாடகி நஞ்சம்மா மிகப்பெரிய கவுரவத்தை பெற வேண்டும், உலகம் முழுவதும் அறியப் படவேண்டும் என்று விரும்பினீர்கள். அதுவும் இன்று நடந்துவிட்டது.. ஆனால் அதை பார்ப்பதற்கு இன்று நீங்கள் இல்லையே” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.