கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
விக்ரம் படத்தை அடுத்து மீண்டும் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் இணைந்துள்ளார் கமல்ஹாசன். கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உட்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் முதல் நாள் தான் கலந்து கொண்ட போது இயக்குனர் ஷங்கருக்கு கை கொடுத்தபடி அவர் தனக்கு ஒரு காட்சியை விளக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார் கமல்ஹாசன்.
இந்த நிலையில் தற்போது இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசனுக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருப்பதை யாரோ மொபைலில் படமெடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த தோற்றம் 1920களில் இருப்பது போன்று உருவாக்கப்பட உள்ளதாக அந்த போட்டோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ரஜினியின் ஜெயிலர் படத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ஜெயிலர் படத்தில் தான் நடிக்கும் கெட்டப்பில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருப்பவர் ரஜினி, தூரத்தில் நிற்கும் ரசிகர்களை பார்த்து இரண்டு கைகளால் வணங்கியபடி செல்லும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.