இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
இந்திய மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 23ம் தேதியை தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது. அன்றைய தினம் எல்லா சினிமாவுக்கும் 75 ரூபாய்தான் கட்டணம் என்று அறிவித்தது. இதன் காரணமாக பல திரையரங்குகளில் வழக்கத்தை விட முன்பதிவு அதிகமாக நடந்தது. 50 சதவிகித டிக்கெட்டுகள் ஒரு நாள் முன்பே, விற்றுத் தீர்ந்துவிட்டன.
23ம் தேதி மட்டும் சுமார் 65 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் திரையரங்குகளில் படம் பார்த்துள்ளனர். பல தியேட்டர்களில் 6 காட்சிகள் வரை திரையிடப்பட்டன. அன்றைய தினம் படம் பார்க்க வந்த ரசிகர்கள் “இந்த கட்டணத்தில் நாங்கள் எல்லா படத்தையும் பார்ப்போம்” என்று கூறியுள்ளனர். இதன் மூலம் மக்கள் சினிமா தியேட்டருக்கு வரத் தயங்குவதற்கு காரணம் அதன் கட்டண உயர்வே என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் அதிபர்கள் சங்கம் விரிவான விவாதம் ஒன்றை தொடங்கி உள்ளது