நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் பலர் நடிப்பில் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முன்பதிவு இரு தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. அதிகாலை 4.30 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளன. மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கும் முன்பதிவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பள்ளிகளின் காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை தினம் என்பதாலும், விஜயதசமி விடுமுறை வருவதாலும் பலரும் படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். நாவலைப் படித்த ஒவ்வொருவருக்கும் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது தெரிகிறது.
படத்திற்கான பிரமோஷன் மிகவும் குறைவாக உள்ளது என்று விமர்சனம் எழுந்த நிலையில் படக் குழுவினர் கடந்த சில நாட்களாக மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.
தமிழில் மட்டுமே இந்த முன்பதிவு சிறப்பாக இருந்து வருகிறது. இன்னும் பல தியேட்டர்களில் முன்பதிவு ஆரம்பமாகவில்லை. இன்றும், நாளையும் ஆரம்பமாக உள்ளது. படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால் தமிழில் முதல் நாள் வசூலாக புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மொழிகளில் முன்பதிவு ஆரம்பமான நிலையில், அங்கெல்லாம் குறிப்பிட்ட அளவில் கூட நடக்கவில்லை.