‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். திருமணம் செய்து கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தைக்கும் தாயானார் காஜல். திருமணத்திற்கு முன்பாகவே அவர் தமிழில் நடித்து வந்த படம் 'இந்தியன் 2'. அப்படம் பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இடையில் இப்படத்திலிருந்து காஜல் நீக்கப்பட்டுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அவை அனைத்தும் வதந்திகள் என பின்னர் தெரிய வந்தது.
தற்போது இந்தப் படத்திற்காக காஜல் அகர்வால் குதிரையேற்றப் பயிற்சி செய்து வருகிறார். குழந்தை பெற்றதற்குப் பின்பு தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும், மீண்டும் பழைய நிலைக்கு வருவது பற்றியும் நேற்று தன்னுடைய பெரிய பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். “இந்தியன் 2, உங்களுடன் மீண்டும் பயிற்சியில் குதித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது பணியில் புதிய திறமைகளை கற்றுக் கொள்வதற்கும், பின்னர் அவற்றை பொழுதுபோக்காக தொடர்வதற்கும் தூண்டியுள்ளீர்கள். வீடு என்று நான் அழைக்கும், இத்தொழிலின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், எனக்கு வாய்ப்பளித்ததற்கும், என்னை மேம்படுத்திக் கொள்ள உதவுவதற்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காஜலின் இந்தப் பதிவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து லைக் செய்து வருகின்றனர்.