தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியவர் கபிலன். தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார். இவரது 27 வயது மகள் தூரிகை சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரிய அதிர்வலைளை ஏற்படுத்தியது. அதையடுத்து நடந்த விசாரணையில் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்ததால் அவர் அந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தனது மகள் குறித்து கவிதை ஒன்று எழுதி இருக்கிறார் கபிலன். அதில்,
‛‛எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டாள் நான் எப்படி தூங்குவேன்.
எங்கே போனாள் என்று தெரியவில்லை. அவள் காலணி மட்டும் என் வாசலில்.
மின்விசிறி காற்று வாங்குவதற்கா உயிரை வாங்குவதற்கா?
அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்.
அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா எனக்கு தெரியாது. அவளே என் கடவுள்.
குழந்தையாக அவளை பள்ளிக்கு தூக்கிச் சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது. கண்ணீர் துளிகளுக்கு தெரியுமா கண்களின் வலி.
யாரிடம் பேசுவதுஎல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்.
கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பி இருக்க இருந்தாலும் இருக்கிறது இருட்டு.
பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்''
இவ்வாறு உருக்கமாக தெரிவித்துள்ளார்.