மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் அபிர்சந்த் நஹார் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்ததாகவும், அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முரளி கடனாகப் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என, முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015ம் ஆண்டு பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை கோர்ட்டில் அபிர்சந்த் நஹார் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீசார், லதா ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் லதா மீது தொரப்பட்ட சில பிரிவுகளை மட்டும் நீக்கி விட்டு மற்ற பிரிவின் கீழ் விசாரணை நடத்தலாம் என்ற நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் லதா தரப்பு வாதங்களை கேட்ட பிறகு லதாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.