நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
நடிகை அமலாபால் தற்போது மலையாளத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார். அந்தவகையில் ஏற்கனவே பிரித்திவிராஜ் ஜோடியாக நடித்து வரும் ஆடுஜீவிதம், கதையின் நாயகியாக நடித்து வரும் தி டீச்சர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது மம்முட்டி நடித்து வரும் கிறிஸ்டோபர் என்கிற படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக இணைந்துள்ளார் அமலாபால்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் அமலாபால் கலந்துகொண்ட வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.. அமலாபால், மோகன்லாலுடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் மம்முட்டியுடன் இணைந்து நடிப்பது இதுதான் முதன்முறை. சினேகா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் இந்த படத்தின் மற்ற கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக அறியப்படும் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.