ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? |
யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ஓ மை கோஸ்ட். அவருடன் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தர்சா குப்தா உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். பேண்டசி கலந்த திகில் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் வழக்கம்போல் கவர்ச்சிகரமான வேடத்தில் சன்னிலியோன் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் யுவன் ஓ மை கோஸ்ட் படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையில் நடைபெற்றதாகவும், சன்னி லியோனுக்கு தமிழ் பேச பயிற்சி கொடுத்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியதாகவும் தெரிவித்திருப்பவர், இந்த படம் சன்னி லியோனுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுக்கும். அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.